இலங்கை- ஜனாதிபதி கோட்டாபயவின் நீச்சல் குளத்திற்குள் குதித்த போராட்டக்காரர்கள்

131 Views

Imageதடைகளைத் தகர்த்தெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். எனினும் ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து முன்னரே தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போராட்டம்

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

டலஸ் உட்பட மொட்டு கட்சியின் 16 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதி, பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். புதிய பிரதமரின் கீழ் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spacer.png

ஜனாதிபதி செயலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்தமையை அடுத்து அங்கு மிகவும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply