சிறீலங்காவின் புதிய அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும் – அமெரிக்கா

சிறீலங்கா மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசு சிறீலங்காவில் மனித உரிமைளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனோ வைரசின் நெருக்கடியிலும் தேர்தல் நன்றாக நடைபெற்றுள்ளது. புதிய அரசு பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடித்து நாட்டின் இறைமையை காப்பாற்றும் என தாம் நம்புவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.