இலங்கை தற்போது எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டிற்கு உள்ளாகியுள்ளது, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து கார்பன் மோனாக்சைட் , சல்பர் டை ஒக்சைட் மற்றும் நைட்ரஜன் டை ஒக்சைட் துகள்கள் காற்றுடன் கலக்கின்றன என சுற்றுச்சூழல் அமைச்சர் நசிர் அஹமட் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்தத் துகள்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வீசும் காற்றுடன் இலங்கையை அடைகின்றன, இது தீவில் நிலவும் தற்போதைய வளிமண்டல நிலைமைகளால் தூண்டப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் நிலைமை குறையத் தொடங்கியுள்ளது, ”என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“காற்றில் உள்ள வாயுக்களின் துகள்கள் நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டங்களில் நுழைந்து இதய நோய்களை ஏற்படுத்தும். இலங்கையின் காற்றின் தரத்தை திறம்பட கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் .
நிலைமையை சமாளிக்க, இலங்கை சர்வதேச காலநிலை உடன்படிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.