மாண்டஸ் புயல் வலுவிழந்தது: சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் மையம்

மாண்டஸ் அதிதீவிர புயல், புயலாக வலுவிழந்து சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், “மாண்டஸ் தீவிர புயல் தற்போது வலு குறைந்து சென்னைக்கு தெற்கு, தென் கிழக்கே, 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து. இன்று காலை இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்” என்றார்.