சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியிருந்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு?’, ‘மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம்’, ‘மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு’, ‘தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே மறுக்காதே’, ‘கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே எங்கே’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், யுத்தகால மனித உரிமை மீறல்கள் சார்ந்த புகைப்படங்கள், கறுப்புக்கொடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும் காணப்பட்டனர்.