இலங்கையில் பேருந்து கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு

268 Views

பேருந்து கட்டணம் அதிகரிப்பு: இலங்கையில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய, 40 ரூபா ஆகக்குறைந்த கட்டணம் மற்றும் 30 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று (29) சமர்ப்பித்திருந்தது.

எவ்வாறியினும், போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கமைய, 22 சதவீதத்தினால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவும், குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply