காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது
அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை நேற்று (ஜூன் 29) காலி முகத்திடல் பகுதியில் இருந்து காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை BASL வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “காலி முகத்திடல் பொது பகுதி என்பதனால் அங்கு கூடும் போராட்டக்காரர்களை கலைக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை. மக்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறோம். கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமை உட்பட எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நசுக்குவது நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாகாது, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சொல்லொணா இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.