இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு

IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 10 பேர் கொண்ட IMF குழு கடந்த ஜூன் 20 ஆம் திகதி  இலங்கைக்கு பயணம் செய்தது.

பிணைமுறிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக IMF பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்புகளுடன் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இலங்கை உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Tamil News