இலங்கை நிலவரத்தை ஆராய இந்தியாவிலிருந்து விசேட குழு

இந்தியாவிலிருந்து விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது.

இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கை நிலவரத்தை ஆராய்வதற்காக பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்தநாகேஸ்வரன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான மூன்று மணிநேர விஜயத்தின்போது அவர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்கவுள்ளனர்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் நிதியமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

மேலும் இலங்கை எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான கடன் உதவி திட்டத்தை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply