சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம், கடந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷன, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, கருணா என்ற வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கோன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.



