வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் கோரிக்கை

வேளாண்மைத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டதாக தாங்கள் நம்பும் ஜனாதிபதி நேரடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகளின் குரல் (தேசிய கோவி ஹட) அமைப்பு தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த  குறித்த அமைப்பு,

நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் அதேவேளை பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை பாதுகாத்து வரும் விவசாயிகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதும் கேலிக்குள்ளாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எனவே வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு, வேளாண்மை அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.