வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறு தமிழ் பேசும் கட்சிகளிடையிலான புரிந்துணர்வு இன்றையதினம் கொழும்பு ரேணுகா விடுதியில் பிற்பகல் ஒருமணிக்கு நடைபெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளிடையே குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.



