தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான் | சட்டத்தரணி ஜான்சன்

570 Views

சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம்கள் சிறைக்கு நிகரான அமைப்பே

புலம்பெயர் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு பல உதவிகளை செய்பவரும்  இந்திய சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு உதவி வருபவருமான சட்டத்தரணி ஜான்சன் அவர்கள் இந்திய சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பாக உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி

கேள்வி:
சிறப்பு முகாம்கள் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மன அழுத்தங்களுக்கு உட்பட்டு  மனநலம் குன்றி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்ற ஒரு செய்தி சம்பந்தமாக மேலதிக தகவல்களைத் தரமுடியுமா?

பதில்:
2009 இறுதிப் போரிற்குப் பின்னரும் கூட தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் நடைமுறை தொடர்ந்து இருந்து வருகின்றது. 1990இல் தமிழ்நாட்டில் போராளிகளையும், பொதுவான அகதி  மக்களையும் பிரிப்பதற்காகத் தான் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது என்பது விபரமறிந்தவர்களுக்குத் தெரியும். இந்திய அயல் நாட்டவர் சட்டம் 3 -2 E, இன்படி ஒரு அயல் நாட்டவரை தடுத்து வைக்கும் சட்டம் தான். நம்முடைய கண்ணோட்டம் என்னவெனில், புலம்பெயர்ந்து வரும் ஈழத்தமிழரை நீங்கள் அயல் நாட்டவராகப் பார்க்கக் கூடாது. அயல் நாட்டவர் என்பது வேறு. அகதி என்பது வேறு.  ஒரு அயல் நாட்டவன் சுற்றுலாவுக்காக வருவான்.  ஒரு வணிக நோக்கத்திற்காக வருவான்.  ஆனால் உயிர் அச்சத்தில் வருகின்றவர்களை அயல் நாட்டவர் என்று கூறி  அயல் நாட்டவர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என்பதை 1990 களிலிருந்து பல்வேறு அமைப்புக்கள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் 2009க்கு பின்னர் இந்த சிறப்பு முகாம் நடைமுறையில் ஏதாவது மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தோம்.  எதுவும் வரவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ்நாட்டினுடைய  திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், பன்னெடுங் காலம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.  அதாவது ஒரு வழக்கில் பிணையில் விடுதலையானாலோ  அல்லது அந்த வழக்கில் சிறையில் இருந்து தன்னை நிரபராதி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு விடுதலையானாலோ  அல்லது வழக்கில் ஒருவேளை சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டு தண்டனையை  முடித்து வெளியில் வந்தாலோ  சிறை வாயிலில் வைத்து அவரை மீண்டும் கைது செய்து அயல் நாட்டவர் சட்டப்படி அந்த சிறப்பு முகாமில் அடைத்து வைக்கிறார்கள்.

சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான். இருநூற்றைம்பதற்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவலர் பணியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  மூன்றடுக்கு பாதுகாப்பு இருக்கின்றது. சிறப்பு முகாமைச் சுற்றி முள் வேலிக் கம்பிகள்,  மின்சார கம்பிகள் அமைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிற்கிறார்கள். வெளியில் யாரும் செல்ல முடியாது.  தற்காலங்களில் உறவினர்களைக் கூட முகாமுக்குள் சென்று அவர்களை நேர்காணல் செய்வதற்கு அனுமதி மறுத்து வருகிறார்கள்.  கடந்த காலங்களில் செங்கல்பட்டு,  வேலூர் கோட்டை போன்ற மிகவும் பரபரப்பான பதட்டமான காலகட்டங்களில் போராளிகள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த காலகட்டங்களில் கூட உறவினர்களை நேர்காணல் செய்வதற்கு தடுப்பது கிடையாது.  தற்பொழுது உறவினர்களே வாசலிலேயே வைத்து முகத்தை காட்டி திருப்பி அனுப்புகின்ற ஒருபோக்கு இருக்கின்றது.

அதேபோன்று இந்த சிறப்பு முகாமில் எங்களை ஏன் நெடுங்காலம் வைத்திருக்கின்றீர்கள். ஒரு சிலர் எங்களை நாட்டிற்கு  அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.  ஒரு சிலர் நாங்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் பதிவு செய்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை எங்களுடைய பெற்றோர்களிடம் அனுப்பி வைத்து விடுங்கள் என்று சொல்கிறார்கள்.  ஒரு சிலர் இப்படி பல வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இருக்கிறார்கள்.  எனவே ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் மனம் குமுறி அல்லது எதுவுமே நடக்காது என்ற விரக்தி மன நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகள் தொடர்ச்சியான போராட்டம் நடத்துகின்றனர்.  அதில் ஒரு சிலர் மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஒரு சிலர் வயிற்றை அறுத்து கொண்டனர்.  கழுத்தை அறுத்துக் கொண்டனர்.  10நாட்கள் 15 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன.  அவர்கள் தொடர்ச்சியாக சிறைச்சாலைக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.  இப்படி எல்லாம் தொடர்ந்து பிரச்சினைகள்.

அதனுடைய ஒரு அங்கமாகத்தான் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இந்த காணொளி காட்சியில் ஆனந்தராசா என்ற ஒரு சிறப்பு முகாம் வாசியைக்  குறித்து நான் ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தேன்.  அந்த ஆனந்தராசா என்பவர் 2019இல் தமிழ்நாட்டில் கைது செய்யப்படுகிறார்.  அவர் 2006 காலகட்டங்களில் இலங்கை  காவல்துறையினரால், இராணுவத்தினரால்  கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் சிறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் அவர் அங்கிருந்து விடுதலையாகி இலங்கையில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்து இந்தியா வந்த நிலையில் 2019 அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.  சிறையிலிருந்து வழக்கை முடித்து வெளியே வரும் பொழுது மீண்டும் அவரை சிறப்பு முகாமில் கொண்டுவந்து அடைத்துவிட்டனர்.  அந்த ஆனந்தராசா கிட்டதட்ட 2 மாதம் தமிழ்நாடு சிறையில்   இருந்தபோதே மனநோயாளியாகி விட்டார். அதற்கான காரணம் என்ன சொல்றார்கள் எனில்,  இலங்கை சிறையில் ஒரு சிலர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டன.  அது பக்க விளைவுகளை காலப்போக்கில் ஏற்படுத்தக் கூடியன.  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்று முழுக்க ஒரு   ஒரு மனிதனை முடக்கக் கூடிய ஒரு சில மருந்துகளை கொடுத்தார்கள் என்று சொல்கிறார்கள்.

அவர் இந்தியாவில் வந்து சிறைக்கு வரும் பொழுதே அவர் ஒரு மனநோயாளியாகத் தான் இருந்தார்.  அக்கா இந்த இந்தியாவில் மன நலச் சட்டம்(Mental Health Act) என்று ஒன்று இருக்கின்றது.  குற்றவியல் விசாரணை முறை சட்டத்திலேயே  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்தால்கூட அவரை மனநல காப்பகத்தில் வைத்து கொலை வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று தான் வந்து சட்டம் சொல்கிறது.  அப்ப மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது வந்து நீங்கள் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்து அந்த வழக்கை முடித்து அவர் வெளியில் வரும்போது அவரை சிறப்பு முகாமில் வைத்திருக்கிறீர்கள்.

என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தெரியாமல், அவர் 2019இலிருந்து அவர் சிறப்பு முகாமில் இருந்து கொண்டிருக்கிறார். மிகக் கொடூரமான வாழ்க்கை. சரியாக உணவு உண்பது கிடையாது. எப்போதாவது பசிக்கும் போது சாப்பிடுவார். நேற்று செவ்வி கொடுப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில், கடந்த 15 நாட்களாக அவர் சாப்பிடவே இல்லை. தண்ணியை குடித்துக் குடித்து ஒரு மாதிரியாக படுத்துக் கிடக்கிறார்.  உடல் மெலிந்து போய் விட்டது, முற்றிய நிலையில் இப்போது அவர் இருக்கிறார். உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையில் இருக்கிறார். சிறப்பு முகாம் நிர்வாகத்தினர் இவரை  முன்னாள் விடுதலைப் புலி என்று கூறி கைது செய்த காரணத்தினால் அல்லது தமிழ்நாடு கியு பிரிவு உளவுத்துறையினர் இவரை ஒரு பயங்கரவாதியை போன்று சித்தரித்து கைது செய்து சிறையில் அடைத்து அந்த வழக்கு முடிந்த காரணத்தினால் இலங்கை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சில முயற்சிகளும் எடுத்தார்கள்.

அதை அவர் மறுத்த காரணத்தினால், மனநோயாளியை சிறப்பு முகாமில் வைத்துக் கொண்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் குற்றச்சாட்டாகச் சொல்கிறோம். தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையகம் என்றிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் மனித உரிமைச் சட்டங்கள் வந்த போது இந்தியாவில் அந்த மனித உரிமைச் சட்டங்களை ஏற்றுக் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையகம், மாநில மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றை உருவாக்கியிருக்கின்றார்கள். தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சென்று நானே அவரின் மனுதாரராக அவர் எனது கட்சிக்காரர். அவர் சிறப்பு முகாமில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தப் பிரச்சினையில் மனித உரிமைகள் ஆணையகம் தலையிட வேண்டும் என்று சொல்லி நான் மனுக் கொடுத்திருக்கிறேன்.

இது ஆனந்தராசா பிரச்சினை மட்டுமல்ல.  ஆனந்தராஜாவை போன்று இன்னும் உளவியல் ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விடுதலைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற ஏராளமான ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாமில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கேள்வி:   
ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிருகங்களை வதை செய்வதனால் அதை தடை செய்கின்றோம் என்று சொன்னார்கள்.  இப்படி சொன்ன இந்தியா, ஒரு மனநிலை பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை ஒரு வதை முகாமிலே வைத்து  இவ்வாறு வதைப்பது இந்திய சட்டத்தில் எவ்வாறு உடன்பாடாக அமைகிறது?

பதில்:
இது இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு முற்று முழுக்க முரணானது. சட்டவிரோதமானது.  பிரச்சனை என்னவெனில்,  இதில் ஆனந்தராசா மனநோயாளி கிடையாது.  சட்டத்தை மதிக்காமல் ஆனந்தராசாவை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறைவர்கள் தான் மன நோயாளிகள்.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள்.  காமாலைக் கண்ணணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.  என்று சொல்வார்கள்.  அந்த மாதிரி எல்லாமே முடிஞ்சு போச்சு என்று  சொல்றாங்க 2009க்கு பின்னர் போர் முடிந்தது என்று சொல்கிறீர்கள்.  விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததாக சொல்கிறீர்கள்.

அதுக்கு பின்னாடி விடுதலைப் புலி உறுப்பினர் என்று கைது செய்து,  அவர் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைத்து சிறையிலிருந்து வெளியே வந்தவரை சிறப்பு முகாமில் வைத்து  நாடு கடத்தப்படும் என்று அவரை மிரட்டி உருட்டி விட்டு அவரை மனநோயாளியாக்கி,  மன நோயாளி ஆகி விட்டார் என்பதை மறைத்து உள்ளுக்குள் வைத்து விட்டு அவரை குற்றவாளி மாதிரி போட்ட நாடகங்கள்  எல்லாம் ரொம்ப அசிங்கமானது, அருவெறுப்பானது, கேவலமானது.  இந்திய சட்டங்களுக்கு எதிரானது.   மனித மாண்புக்கு எதிரானது.  உலகளாவிய அகதிகள் சட்டங்களுக்கு  எதிரானது.  உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை எதிரானது.  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்ற  பன்னாட்டு உடன்படிக்கைக்கு எதிரானது.  உலகளாவிய சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கைக்கு எதிரானது.    இப்படி பல்வேறு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்துப் போட்டுள்ளது.

கையெழுத்து போடாத ஒரே ஒரு உடன்படிக்கை பன்னாடு தழுவிய அகதிகள் நிலை தொடர்பான உடன்படிக்கை.  1951 மற்றும் நெறிமுறைகள் 1968 அதில் தான் இந்தியா கையெழுத்துப் போடவில்லை. அதனாலதான் வந்து அகதிகளை இந்தியா மனிதத் தன்மையோடு நடத்துவது கிடையாது.  இந்தியாவில் இருந்து அகதிகளாக கனடா போனவர்கள் அங்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகிவிட்டார்கள். கனடாவில் ஈழத்தமிழர்கள் 3பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் இங்கிருந்து போனவர் என நினைக்கிறேன்.  அவர் இந்தியாவில் இருந்திருந்தால், அவரின் நிலைமை என்ன? அவரும் சிறப்பு முகாமில் தான் போயிருந்திருப்பார்கள்.

மேற்குலக நாடுகளிலும் குறைபாடுகள் இருக்கின்றன. அவுஸ்திரேலியாவிலும் பிரச்சின இருக்கின்றது. நியுசிலாந்திலும் பிரச்சினை இருக்கின்றது. கனடா, லண்டன் போன்ற தேசங்களில் அகதிகளை கையாள்வதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழர் விடயத்தில் UNHCR உட்பட பல்வேறு  மேற்குலக அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன என்பதெல்லாம் சரி. இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களை, உலகளாவிய அகதிகள் சட்டங்களை மதிக்கிறார்கள்.  இந்தியாவில் அவற்றை மதிக்கிறார்கள் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் குடியுரிமையே கொடுக்கவில்லை.

அண்மையில்கூட யாழ்.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா என்கிற குழந்தையின் பிரச்சினையை பேசினேன். நீச்சல் போட்டியில் இந்திய அளவில் இரண்டு மூன்று தடவைகள் முதலிடத்தில் வந்துள்ளார். அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது என்கிறார்கள். காரணம் உன்னிடம் கடவுச்சீட்டு இல்லை. நீ அயல்நாட்டவர். அகதி என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுக்கிறார்கள். ஏனென்றால், நீ அகதி என்கிறார்கள்.  அயல் நாட்டவர் என்று கூறி 35 ஆண்டுகளாக ஒரு இனத்தை கொடுமைப்படுத்துவது அயோக்கியத் தனமானது. ஏமாற்றுத்தனமானது. பித்தலாட்டமானது. உலகளாவிய மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது. மனித மாண்புக்கு எதிரானது.

1990இற்கு பிற்பாடு இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இருக்கின்றார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 10 பேர் சிறப்பு முகாமில் இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே பிறந்தவர்கள், இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள், இந்தியாவிலேயே படித்தவர்கள். ஏதோ ஒரு முயற்சியில் உள்ளே வருவது குற்றமாகிறது.  உள்ளிருந்து வெளியே போவதும் குற்றமாகிறது. எங்கேயும் வெளிநாட்டுக்கு போகலாம் என  சிலர் நினைக்கலாம்.  ஒரு கடல் வழியாக தப்பித்து உயிரை துச்சமா மதிச்சு கனடா, ஆஸ்திரேலியாவுக்கு போகலாம் என  நினைக்கலாம். அது ஒரு அகதிகளுக்கான உரிமையாகத் தான் நாம் பார்க்கணும்.  உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் கூறு 14இல் சொல்கிறது. ஒரு தேசத்தில் இருந்து எல்லை கடந்து இன்னொரு தேசத்திற்குள்  நுழையும்போது அந்த தேசத்தில் வந்து உரிமை கோரும் போது அங்கு வாழ்வதற்கு தஞ்சம் கோரும் போது அவரை குற்றவாளியாக நடத்தாமல் தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று உலகச் சட்டம் சொல்கிறது.

ஆகவே ஒரு ஈழத்தமிழன் ஒருவன் உயிர் பிழைத்து அங்கு வருவது ஒரு பெரிய குற்றம் கிடையாது.  இன்றைக்கு தமிழக அரசு அவர்களுடைய சட்டத்தில் தளர்வு கொண்டு வந்திருக்கிறது.  பொருளாதார காரணங்களுக்காக அங்கிருந்து வருகின்ற ஈழத் தமிழர்கள் யார் மீதும் குற்ற வழக்கு தொடுக்கக் கூடாது.  அவர்களை  நேரடியாக மண்டபம் அகதி முகாம்களிற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி  தீர்மானம் இயற்றி அதன் அடிப்படையில் இதோட 40 பேருக்கு மேல வந்துட்டாங்க. அப்ப நீங்க சட்ட தளர்வுகளை எளிதாக செய்ய முடியும்.  கடல் கடந்து வந்த ஈழத் தமிழர்கள் மீது நீங்க கடவுச்சீட்டு, அயல் நாட்டவர் சட்டம்  என்ற சட்டத்தை தொடுத்து அவர்களை சிறையில் அடைத்து,  சிறையிலிருந்து வெளியே வருபவர்களை சிறைபோன்ற   இன்னொரு அமைப்பாகிய சிறப்பு முகாமில் வைத்து கொடுமைப் படுத்துவது என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது.

சட்டத்திற்கு இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கே எதிரானது.  இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக இந்தியாவினுடைய நிர்வாக அமைப்புகள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்திய நீதிமன்றங்கள் கூட ஒரு பாரபட்சமான தன்மையோடு இருக்காங்க.  அவங்களுக்கு கூட இது குறித்த புரிதல் இல்லைன்னா நம்ம சொல்லவேண்டி இருக்கும்.  ஒருசில நீதிமன்றங்களில் ஒரு சில தீர்ப்புகள் முன்னோடி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  அது ஈழத்தமிழர்களுக்காக வழங்கப்படவில்லை.  வட கிழக்கு இந்திய பகுதிகளில் உள்ள அருணாச்சல பிரதேசத்திலுள்ள சங்குமா என்ற மக்களுக்கான வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்கிறது இவர்கள் இவ்வளவு காலம் இங்கு இருந்துவிட்டார்கள். பங்களாதேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கலாம் என்று சொல்கிறார்கள்.

திபெத் அகதிகளுக்கு குடியமர்வுக்கான ஏற்பாட்டைப் பண்ணி, அவர்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைக் கொடுத்து மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் அயல் நாடுகளுக்கு சில தேவைகளுக்காக போகலாம். வரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்களை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்.  இந்தியாவில் 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். பாகிஸ்தானிலிருந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேசிலிருந்து மத ரீதியான காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டு புலம்பெயர்ந்து வருகின்ற இந்துக்கள்,  பார்ஸிகள், கிறிஸ்தவர்களுக்கு எல்லாம் இந்தியாவில் குடியுரிமை கொடுக்கலாம் என நீங்கள் எழுதிவிட்டீர்கள். ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சைவ மதத்தை வணங்கியவர்கள். நீங்கள் சொல்கின்ற முருகனை வணங்கியவர்கள். நீங்கள் சொல்கின்ற சிவனை வணழங்கியவர்கள்.

நீங்கள் சொல்கின்ற அம்மனை வணங்கியவர்கள்.  மத ரீதியான காரணங்களும் அங்கு இருந்தன. சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் முருகன் கோயிலும் கூட இடிக்கப்பட்டன.  இந்து ஆலயங்கள் நொருக்கப்பட்டன.  அது போன்ற பாதிப்புகளால்  அவர்கள் வந்திருக்காங்க.  ஈழத் தமிழர் ஒரு இலட்சம் பேர் இருந்தும் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இது ஒரு பாரபட்சமான மனநிலை.  இந்தியாவினுடைய  கொள்கை முடிவுகளை, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள்.  தொப்புள்கொடி உறவுகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் கடல் கடந்து வந்து பல்வேறு துன்ப துயரங்களை தாங்கி பல இன்னல்களுக்கு இடையில் இங்கு வந்து சேர்கின்ற மக்களை இதுபோன்று சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது என்பது இந்திய சட்டங்களுக்கு மட்டுமல்ல, உலக சட்டங்களுக்கு, மனித உரிமைகளுக்கு எதிரானதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்தியச் சட்டம் என்ற ஒரு சட்டம் இருக்கிறது.  தமிழ்நாட்டில் மாநிலச் சட்டம் என்று ஒன்று இருக்கின்றது.  இந்த மாநில சட்டம் கூட இந்த ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய ஒரு பாரபட்சத்தை மிகப்பெரிய ஒரு மனித உரிமை மீறலை  அது செய்கின்றதா?

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது ஒரு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனநிலை கொண்ட ஒரு மாநிலம் தான்.  நீண்ட நெடுங்காலமாக இந்த போராட்டத்தை 83 கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைகள் எக்காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. அது பெரும் போராட்டம் நடந்த போது, ராஜீவ் காந்தி கொலை நடந்த பின்னரும், 2009 இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டங்களிலும், இன்று வரையிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மனநிலை தான் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. தமிழன் என்ற உணர்வோடு இருக்கின்ற இந்த ஆதரவு மனநிலையை தங்களுடைய வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தடவை தேர்தல் காலங்களிலும் ஈழத்தமிழர் ஆதரவு என்று நாடகம் போடுவார்கள். ஒரு சிலர் இதயத்திலிருந்தும் வரலாம். ஒரு சிலர் நாடகமாகவும் இருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.

1990இல் இன்றைய திமுக தான் ஆட்சியில் இருந்தது. இந்த திமுக ஆட்சிக் காலத்தில் தான் சிறப்பு முகாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது போராளிகளைப் பிரிப்பதற்காக இதை கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வேலூர் கோட்டை முகாமில் கொண்டு சென்று அடைத்து வைக்கிறார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் நான் ஆட்சிக்கு வந்ததும் வேலூர் கோட்டை முகாமை இழுத்து மூடுவேன். அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை நான் விடுதலை செய்வேன் என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்த அம்மா உடனே செங்கல்பட்டில் இன்னொரு சிறப்பு முகாமை திறந்தார்கள். கொஞ்ச நாளிலே மதுரை மேலூர், செய்யாறு, திருவையாறு, பழநி, பூந்தமல்லி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன.  ஒரு சிறப்பு முகாமை திறப்பது. ஒரு சிறப்பு முகாமை மூடுவது. தற்போது திருச்சியில் ஒரு சிறப்பு முகாம்.

நாங்கள் இந்தியாவின் அயல் நாட்டவர் சட்டத்திற்குள் நாங்கள் போகவில்லை. அயல் நாட்டவர் சட்டம் பிரிவு 3 2E இன்படி அயல் நாட்டவர் ஒருவரை தடுத்து வைப்பது, கண்காணிப்பது, அவரின் நடமாட்டத்தை நெறிப்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்தச் சட்டங்களில் வழங்கப்பட்டிருப்பதனால், அதை அயல் நாட்டவர்களுக்கு செய்யுங்கள். அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால் அகதிகளாக வந்தவர்களுக்கு அப்படிச் செய்யக் கூடாது என்று மட்டும் தான் நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு என்று சொல்லப்பட்டுள்ளது. 1958இல் மத்திய அரசு போட்ட அரசாணையின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மாநில அரசிற்குத் தான் இந்த சிறப்பு முகாம்களை நடத்துகின்ற முழு அதிகாரமும் உள்ளது.

தற்போது அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சிறையில் அடைக்காது மண்டபம் அகதி முகாம்களில் விடும்படி தமிழ்நாடு அரசு கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அது நல்லதொரு விடயம். ஆனால் இதேபோன்று  ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் இனி அடைக்கப் போவதில்லை என்ற முடிவையும் தமிழ்நாடு அரசு எடுக்கலாம். ஏனெனில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை அரசாணை பிறப்பிக்கிறார்கள். தமிழ்நாட்டின் Q பிரிவு உளவுத்துறை சிறப்பு முகாமில் அடைப்பதற்கு பரிந்துரை செய்கிறார்கள். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் இந்த சிறப்பு முகாமை நடத்துகிறார். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மறுவாழ்வுத்துறை என்ற அமைப்பு இவர்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. ஆகவே நான்கு துறைகளும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 1980களிலிருந்து இதுவரையில் பல ஈழத்தமிழர்களை மாநில அரசு விடுவித்தும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் மிகப்பெரும் தளபதிகள் எல்லாம் விடுதலையாகிப் போயிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் என சிறப்பு முகாமில் இருந்தவர்கள்கூட விடுவிக்கப்பட்டார்கள்.

மேற்குலக நாடுகளிலும் குறைபாடுகள் இருக்கின்றன. அவுஸ்திரேலியாவிலும் பிரச்சினை இருக்கின்றது. நியூசிலாந்திலும் பிரச்சினை இருக்கின்றது. கனடா, லண்டன் போன்ற தேசங்களில் அகதிகளை கையாள்வதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழர் விடயத்தில் UNHCR உட்பட பல்வேறு  மேற்குலக அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன என்பதெல்லாம் சரி. இருந்தாலும்  குறைந்தபட்சம் அவர்கள் உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களை, உலகளாவிய அகதிகள் சட்டங்களை மதிக்கிறார்கள்.  இந்தியாவில் அவற்றை மதிக்கிறார்கள் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் குடியுரிமையே கொடுக்கவில்லை.

அண்மையில்கூட யாழ்.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா என்கிற குழந்தையின் பிரச்சினையை பேசினேன். நீச்சல் போட்டியில் இந்திய அளவில் இரண்டு மூன்று தடவைகள் முதலிடத்தில் வந்துள்ளார். அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது என்கிறார்கள். காரணம் உன்னிடம் கடவுச்சீட்டு இல்லை. நீ அயல்நாட்டவர். அகதி என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுக்கிறார்கள். ஏனென்றால், நீ அகதி என்கிறார்கள்.  அயல் நாட்டவர் என்று கூறி 35 ஆண்டுகளாக ஒரு இனத்தை கொடுமைப்படுத்துவது அயோக்கியத் தனமானது. ஏமாற்றுத்தனமானது. பித்தலாட்டமானது. உலகளாவிய மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது. மனித மாண்புக்கு எதிரானது.

1990இற்கு பிற்பாடு இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இருக்கின்றார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 10 பேர் சிறப்பு முகாமில் இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே பிறந்தவர்கள், இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள், இந்தியாவிலேயே படித்தவர்கள். ஏதோ ஒரு முயற்சியில் உள்ளே வருவது குற்றமாகிறது.  உள்ளிருந்து வெளியே போவதும் குற்றமாகிறது. எங்கேயும் வெளிநாட்டுக்கு போகலாம் என  சிலர் நினைக்கலாம்.  ஒரு கடல் வழியாக தப்பித்து உயிரை துச்சமா மதிச்சு கனடா, ஆஸ்திரேலியாவுக்கு போகலாம் என  நினைக்கலாம். அது ஒரு அகதிகளுக்கான உரிமையாகத் தான் நாம் பார்க்கணும்.  உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின்  கூறு 14இல் சொல்கிறது. ஒரு தேசத்தில் இருந்து எல்லை கடந்து இன்னொரு தேசத்திற்குள்  நுழையும்போது அந்த தேசத்தில் வந்து உரிமை கோரும் போது அங்கு வாழ்வதற்கு தஞ்சம் கோரும் போது அவரை குற்றவாளியாக நடத்தாமல் தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று உலகச் சட்டம் சொல்கிறது.

ஆகவே ஒரு ஈழத்தமிழன் ஒருவன் உயிர் பிழைத்து அங்கு வருவது ஒரு பெரிய குற்றம் கிடையாது.  இன்றைக்கு தமிழக அரசு அவர்களுடைய சட்டத்தில் தளர்வு கொண்டு வந்திருக்கிறது.  பொருளாதார காரணங்களுக்காக அங்கிருந்து வருகின்ற ஈழத் தமிழர்கள் யார் மீதும் குற்ற வழக்கு தொடுக்கக் கூடாது.  அவர்களை  நேரடியாக மண்டபம் அகதி முகாம்களிற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி  தீர்மானம் இயற்றி அதன் அடிப்படையில் இதோட 40 பேருக்கு மேல வந்துட்டாங்க. அப்ப நீங்க சட்ட தளர்வுகளை எளிதாக செய்ய முடியும்.  கடல் கடந்து வந்த ஈழத் தமிழர்கள் மீது நீங்க கடவுச்சீட்டு, அயல் நாட்டவர் சட்டம்  என்ற சட்டத்தை தொடுத்து அவர்களை சிறையில் அடைத்து,  சிறையிலிருந்து வெளியே வருபவர்களை சிறைபோன்ற   இன்னொரு அமைப்பாகிய சிறப்பு முகாமில் வைத்து கொடுமைப் படுத்துவது என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது.

சட்டத்திற்கு இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கே எதிரானது.  இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக இந்தியாவினுடைய நிர்வாக அமைப்புகள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்திய நீதிமன்றங்கள் கூட ஒரு பாரபட்சமான தன்மையோடு இருக்காங்க.  அவங்களுக்கு கூட இது குறித்த புரிதல் இல்லைன்னா நம்ம சொல்லவேண்டி இருக்கும்.  ஒருசில நீதிமன்றங்களில் ஒரு சில தீர்ப்புகள் முன்னோடி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  அது ஈழத்தமிழர்களுக்காக வழங்கப்படவில்லை.  வட கிழக்கு இந்திய பகுதிகளில் உள்ள அருணாச்சல பிரதேசத்திலுள்ள சங்குமா என்ற மக்களுக்கான வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்கிறது இவர்கள் இவ்வளவு காலம் இங்கு இருந்துவிட்டார்கள். பங்களாதேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கலாம் என்று சொல்கிறார்கள்.

திபெத் அகதிகளுக்கு குடியமர்வுக்கான ஏற்பாட்டைப் பண்ணி, அவர்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைக் கொடுத்து மஞ்சள் நிற அட்டை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் அயல் நாடுகளுக்கு சில தேவைகளுக்காக போகலாம். வரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்களை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்.  இந்தியாவில் 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். பாகிஸ்தானிலிருந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேசிலிருந்து மத ரீதியான காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டு புலம்பெயர்ந்து வருகின்ற இந்துக்கள்,  பார்ஸிகள், கிறிஸ்தவர்களுக்கு எல்லாம் இந்தியாவில் குடியுரிமை கொடுக்கலாம் என நீங்கள் எழுதிவிட்டீர்கள். ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சைவ மதத்தை வணங்கியவர்கள். நீங்கள் சொல்கின்ற முருகனை வணங்கியவர்கள். நீங்கள் சொல்கின்ற சிவனை வணழங்கியவர்கள்.

நீங்கள் சொல்கின்ற அம்மனை வணங்கியவர்கள்.  மத ரீதியான காரணங்களும் அங்கு இருந்தன. சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் முருகன் கோயிலும் கூட இடிக்கப்பட்டன.  இந்து ஆலயங்கள் நொருக்கப்பட்டன.  அது போன்ற பாதிப்புகளால்  அவர்கள் வந்திருக்காங்க.  ஈழத் தமிழர் ஒரு இலட்சம் பேர் இருந்தும் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இது ஒரு பாரபட்சமான மனநிலை.  இந்தியாவினுடைய  கொள்கை முடிவுகளை, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள்.  தொப்புள்கொடி உறவுகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் கடல் கடந்து வந்து பல்வேறு துன்ப துயரங்களை தாங்கி பல இன்னல்களுக்கு இடையில் இங்கு வந்து சேர்கின்ற மக்களை இதுபோன்று சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது என்பது இந்திய சட்டங்களுக்கு மட்டுமல்ல, உலக சட்டங்களுக்கு, மனித உரிமைகளுக்கு எதிரானதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி :
இந்தியச் சட்டம் என்ற ஒரு சட்டம் இருக்கிறது.  தமிழ்நாட்டில் மாநிலச் சட்டம் என்று ஒன்று இருக்கின்றது.  இந்த மாநில சட்டம் கூட இந்த ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய ஒரு பாரபட்சத்தை மிகப்பெரிய ஒரு மனித உரிமை மீறலை  அது செய்கின்றதா?

பதில்:
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது ஒரு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனநிலை கொண்ட ஒரு மாநிலம் தான்.  நீண்ட நெடுங்காலமாக இந்த போராட்டத்தை 83 கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலைகள் எக்காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. அது பெரும் போராட்டம் நடந்த போது, ராஜீவ் காந்தி கொலை நடந்த பின்னரும், 2009 இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டங்களிலும், இன்று வரையிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மனநிலை தான் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. தமிழன் என்ற உணர்வோடு இருக்கின்ற இந்த ஆதரவு மனநிலையை தங்களுடைய வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தடவை தேர்தல் காலங்களிலும் ஈழத்தமிழர் ஆதரவு என்று நாடகம் போடுவார்கள். ஒரு சிலர் இதயத்திலிருந்தும் வரலாம். ஒரு சிலர் நாடகமாகவும் இருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.

1990இல் இன்றைய திமுக தான் ஆட்சியில் இருந்தது. இந்த திமுக ஆட்சிக் காலத்தில் தான் சிறப்பு முகாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது போராளிகளைப் பிரிப்பதற்காக இதை கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வேலூர் கோட்டை முகாமில் கொண்டு சென்று அடைத்து வைக்கிறார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் நான் ஆட்சிக்கு வந்ததும் வேலூர் கோட்டை முகாமை இழுத்து மூடுவேன். அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை நான் விடுதலை செய்வேன் என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்த அம்மா உடனே செங்கல்பட்டில் இன்னொரு சிறப்பு முகாமை திறந்தார்கள். கொஞ்ச நாளிலே மதுரை மேலூர், செய்யாறு, திருவையாறு, பழநி, பூந்தமல்லி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன.  ஒரு சிறப்பு முகாமை திறப்பது. ஒரு சிறப்பு முகாமை மூடுவது. தற்போது திருச்சியில் ஒரு சிறப்பு முகாம்.

நாங்கள் இந்தியாவின் அயல் நாட்டவர் சட்டத்திற்குள் நாங்கள் போகவில்லை. அயல் நாட்டவர் சட்டம் பிரிவு 3 2E இன்படி அயல் நாட்டவர் ஒருவரை தடுத்து வைப்பது, கண்காணிப்பது, அவரின் நடமாட்டத்தை நெறிப்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்தச் சட்டங்களில் வழங்கப்பட்டிருப்பதனால், அதை அயல் நாட்டவர்களுக்கு செய்யுங்கள். அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால் அகதிகளாக வந்தவர்களுக்கு அப்படிச் செய்யக் கூடாது என்று மட்டும் தான் நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு என்று சொல்லப்பட்டுள்ளது. 1958இல் மத்திய அரசு போட்ட அரசாணையின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மாநில அரசிற்குத் தான் இந்த சிறப்பு முகாம்களை நடத்துகின்ற முழு அதிகாரமும் உள்ளது.

தற்போது அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை சிறையில் அடைக்காது மண்டபம் அகதி முகாம்களில் விடும்படி தமிழ்நாடு அரசு கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அது நல்லதொரு விடயம். ஆனால் இதேபோன்று  ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் இனி அடைக்கப் போவதில்லை என்ற முடிவையும் தமிழ்நாடு அரசு எடுக்கலாம். ஏனெனில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை அரசாணை பிறப்பிக்கிறார்கள். தமிழ்நாட்டின் Q பிரிவு உளவுத்துறை சிறப்பு முகாமில் அடைப்பதற்கு பரிந்துரை செய்கிறார்கள். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் இந்த சிறப்பு முகாமை நடத்துகிறார். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மறுவாழ்வுத்துறை என்ற அமைப்பு இவர்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. ஆகவே நான்கு துறைகளும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 1980களிலிருந்து இதுவரையில் பல ஈழத்தமிழர்களை மாநில அரசு விடுவித்தும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் மிகப்பெரும் தளபதிகள் எல்லாம் விடுதலையாகிப் போயிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் என சிறப்பு முகாமில் இருந்தவர்கள்கூட விடுவிக்கப்பட்டார்கள்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் ஈழத்தமிழர் குறித்து பேசும் பல்வேறு தலைவர்கள் தமிழக முதலமைச்சருடன் பேசி இதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வரலாம். மனநிலை பாதிக்கப்பட்டவரை விடுவிக்க முடியாதிருப்பது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதையே செய்ய முடியாதவர்கள் ஈழத்தமிழர்களுக்கு வாழ்வுரிமை கொடுக்கப்ப போகிறோம் என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு தலைவரையும் தாக்க முனையவில்லை. தனுஜா என்ற குழந்தைக்குரிய உரிமையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அவர் வெளிநாடு போய் விளையாட வேண்டும். முதலமைச்சர் கோப்பைக்குரிய விளையாட்டில் விளையாட வேண்டும். பன்னாட்டு குழந்தைகள் உரிமைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டுள்ளது. ஆனந்தராசா போன்ற மனநோயாளிகளை விடுவிப்பதற்கு பேச முடியவில்லையே. இந்தத் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்கள் இங்கிருக்கும் தலைவர்களுக்கு ஆத்மாத்த ஆதரவு கொடுக்கிறீர்கள். அவர்களை மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கிறீர்கள்.  அவர்களுக்கு இந்த விடயங்களை தெரிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த ஊடகத்தின் மூலம் நான் இதையே கேட்டுக் கொள்கிறேன்.

புலம்பெயர் தமிழர்களிடம் பணம், ஆதரவு,  உதவி ஒத்தாசை போன்றவை வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் துன்புறும் ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் எதுவுமே செய்யப்போவதில்லை என்று அவர்கள் இருப்பது ஏமாற்றுத்தனம்.  நாங்கள் சட்டக் களத்தில் நின்று போராடுகின்றோம். இப்போது ஊடகக்களத்தில் வந்து முட்டி மோதி நிற்கிறோம். நாங்கள் கட்சித் தலைவர்கள் கிடையாது. ஆனால் மக்களுக்காக களத்தில் நிற்கிறோம். இந்தக் குரல் புலம்பெயர் தேசத்திற்கு சென்றடைய வேண்டும். அதன் ஊடாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு நடைபெறும் போது ஈழஆதரவு தலைவர்களின் மனதில் மாற்றத்தை கொண்டுவரும். அது உங்கள் ஊடகத்தின் ஊடாக வரவேண்டும்.

புலம்பெயர் தமிழர் பேரவை என்ற அமைப்பை அறக்கட்டளைச் சட்டத்தின்படி நாங்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளோம். குறிப்பாக வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்களை இதில் இணைத்திருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் எந்த தேசத்தில் தமிழர்கள் இருந்தாலும் உதவி செய்கிறோம். இதன் ஊடாக ஒரு வலையமைப்பை உருவாக்குவதற்குத் தான் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் எங்களுக்கு சட்டத்தறை வல்லுநர்களின் உதவி உள்ளது. உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள், சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவை கோரியுள்ளோம். புலம்பெயர்ந்து வாழ்கின்ற, தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கு எந்நாளும் நாங்கள் பணியாற்றுவோம்.

Tamil News

1 COMMENT

  1. […] சிறப்பு முகாம்கள் சிறைக்கு நிகரான அமைப்பே புலம்பெயர் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு பல உதவிகளை செய்பவரும் இந்திய சிறப்புமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-181-may-08/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply