அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தை
ஸ்பெயின் நாட்டிற்குள் அகதிகளாக படகில் பயணித்து நுழைந்த போது, அந்த படகில் வைத்து பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற சம்பந்தப்பட்ட நபர் அந்நாட்டில் பிறந்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும் 10 ஆண்டுகள் அங்கு சட்டப்பூர்வமாக குடியேறியிருக்க வேண்டும். ஸ்பெயினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபரை மணம் முடித்திருக்க வேண்டும்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை இதுவாகும்.