காடுகளைப் பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவு வீதிகளில் வாசகங்கள்

443 Views

IMG 20210819 WA0058 காடுகளைப் பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவு வீதிகளில் வாசகங்கள்

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று வருவதாகவும் இதனை காப்பாறுமாறும் முல்லைத்தீவு-மாங்குளம் வீதியில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

வீதியில் மஞ்சள் வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துக்காளாக “இராணுவமே எமது அளம்பில் காட்டினை காப்பாற்று, எமது காடுகளை விற்கும் கிராம அபிவிருத்தி சங்கம்”

IMG 20210819 WA0067 காடுகளைப் பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவு வீதிகளில் வாசகங்கள்

“இலஞ்சம் பெற்று அளம்பில் வடக்கு காடுகளை விற்கும் வனவளத் திணைக்களம் பிரதேச செயலாளரே எமது  வளத்தினை காப்பாற்றுங்கள், இலஞ்சம் பெறும் அளம்பில் வடக்கு கிராம சேவையாளர், அழிக்கப்படும் அளம்பில் வடக்கு காடுகள்” போன்ற வாசகங்கள் இனந் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply