தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை – ரணில்  

390 Views

ranilkb தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை – ரணில்  

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது.  காபுலில் உள்ள தூதரகத்தை இலங்கை மூடவேண்டும். ஆப்கானிற்கான பயணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.  பமியான் புத்தரின் சிலையை அழித்தது தலிபான்களே.

தலிபான் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த காலத்திலேயே செப்டம்பர் 11 தாக்குதலிற்கு காரணமான அல்ஹைதா உட்பட பல ஜிகாத் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டன.

புதிய தலிபான் அரசாங்கத்தின் கீழ் ஆப்கான் மீண்டும் பயங்கரவாதிகளும் ஜிகாத் தீவிரவாதி களிற்குமான தளமாக மாறக்கூடும் என அனைவரும் கரிசனை கொண்டுள்ளனர். உலக நாடுகளின் மீதான தாக்குதலையும் குரானை தவறாக அர்த்தப்படுத்தி யவர்களையும் இலங்கை அங்கீகரிக்க முடியாது.

இதன் காரணமாக பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளிற்கும் ஏனைய நாடுகளிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை”  என்றார். ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply