நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது இருக்க வேண்டும்- சீனத் தூதுவருடனான சந்திப்பையடுத்து ரணில் ட்வீட்

85 Views

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும், ஒரே சீனா என்ற கொள்கைக்கும் இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் Qi Zhenghong உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடுகளுக்கிடையில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதற்கு காரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு நாடுகள் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது பரஸ்பர மரியாதையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply