காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் கூடாரங்களை அகற்றும் போராட்டக்காரர்கள்

85 Views

நாளை (5) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததன் பிரகாரம் போராட்டக்காரர்கள் சில கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

இந்த கூடாரங்களை அகற்றும் பணி நேற்று இரவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply