டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி- பலர் காயம்

109 Views

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக வளாகத்தை சுற்றி  காவல்துறை  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் பலர் தாக்கப்பட்டனர்,” என்று கோபன்ஹேகன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அங்குள்ள அனைத்து சாலைகளும், நகர மையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதையும் மூடப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரி Soren Thomassen கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply