இலங்கையில் எரிபொருள் நெருக்கடி – இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

113 Views

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply