முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தை சூழ  படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

302 Views

படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள்

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு காவல் துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் காவல்துறையினரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அத்தோடு முள்ளிவய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்று ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீடியோ பதிவு செய்ததன் பின்னர்  காவல்துறையினர் இராணுவ புலனாய்வாளர்கள் அவரை விசாரணைக்கு உட்படுத்தி அவருடைய விபரங்களை பதிவு செய்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில் மக்களை அச்சமடைய செய்யும் நோக்குடன் காவல்துறையினர்  அங்கு செல்பவர்கள் அச்சுறுத்தும் விதமாக இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து  தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு அங்கமாகவே  குறித்த பகுதிக்கு சென்றுவந்த ஊடகவியலாளரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamil News

Leave a Reply