அவுஸ்திரேலியா: சமூகத் தடுப்பில் கழியும் தமிழ் அகதி சிறுமியின் 7வது பிறந்தநாள்

282 Views

தமிழ் அகதி சிறுமியின் 7வது பிறந்தநாள்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான போராட்டத்தில் உள்ளது ‘நடேசலிங்கம்- பிரியா’ குடும்பம். இவர்களது இரண்டாவது குழந்தையான கோபிகாவின் ஏழாவது பிறந்தநாள் சமூகத் தடுப்பில் கழிந்துள்ளது.

சமூகத் தடுப்பு என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு முறை குறைந்தபட்ச அளவிலான சுதந்திரத்தை குறிப்பிட்ட அகதிக்கு வழங்குகிறது.

இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்த அவுஸ்திரேலிய திட்டமிட்டிருந்த நிலையில், பெரும் சட்டப்போராட்டத்துக்குப் பின்னர் அக்குடும்பத்தினருக்கு 12 மாத இணைப்பு விசாக்களை கடந்த ஆண்ட அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் வழங்கியிருந்தார்.

Tamil News

Leave a Reply