ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் கோட்டாபயவைக் கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி

198 Views

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தமிழினப் படுகொலையாளி ராஜபக்சவை கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில்

முன்னதாக ஸ்கொட்லாந்து  தேசத்தில் இருந்து வெளியாகும்  பெரிய தாள் பத்திரிகையில் ஒன்றான , ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில்

காலநிலை மாற்றம் தொடர்பாக  வரும் 31ம் திகதி ஸ்கொட்லாந்து தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறீலங்கா அரசதலைவர்  கோட்டாபயவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள்  பெருமளவில்   ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று  ஸ்கொட்லாந்து  பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபரின் வருகையைக் கண்டித்து ‘WANTED FOR GENOCIDE PRESIDENT OF SRI LANKA’ எனக்குறிப்பிட்டு கோட்டாபயவின் படம் ஒளிரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply