‘மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல’- வலுவடையும் இத்தாலி வலதுசாரி தலைவருக்கு எதிரான விசாரணை?

<br

“மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல” width=”770″ height=”513″ />

2019ல் இத்தாலியக் கடற்பரப்பில் 147 மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்புக் கப்பலில் இருந்து இறங்கவிடாமல் தடுத்தது தொடர்பான விசாரணை, இத்தாலியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான மேட்டியோ சால்வினி எதிராக சமீபத்தில் இத்தாலி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்ற அறைக்குள்ளிருந்து, தனது புகைப்படத்தை ட்வீட் செய்த இத்தாலியின் தீவிர வலதுசாரி லீக் கட்சியின் தலைவரான சால்வினி, “இது பலேர்மோ சிறைச்சாலையின் நீதிமன்ற அறை. இடதுசாரிகளும் சட்டவிரோத குடியேற்றத்தின் ரசிகர்களும் விரும்பும் விசாரணை தொடங்குகிறது. இதனால் இத்தாலிய குடிமக்களுக்கு எவ்வளவு செலவாகும்? ” என அவர் ட்வீட் செய்தார் எனச் செய்தித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற அறைக்கு வெளியே, மீட்புக் கப்பலை இயக்கிய ஸ்பானிய தொண்டு நிறுவனமான ஓபன் ஆர்ம்ஸின் நிறுவனரும் இயக்குநருமான ஆஸ்கார் இதற்குப் பதிலளிக்கும் வகையில், “விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல. ஆனால் அது கேப்டன்களின் கடமை மட்டுமல்ல, அரசுக்கும் அந்த கடமை உள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad ‘மக்களை காப்பாற்றுவது குற்றம் அல்ல’- வலுவடையும் இத்தாலி வலதுசாரி தலைவருக்கு எதிரான விசாரணை?