ஜனாதிபதி செயலகம் முன்  காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சத்தியாகிரகம்

80 Views

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் முன்னால் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தவிர, ஏனைய 223 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக்கொண்டனர்.

வாக்களிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு, தெரிவத்தாட்சி அதிகாரி, இறுதியாக சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார். எனினும், அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரியினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செல்லுபடியாகும் வாக்குகள் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகளை பிரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply