ராஜபக்ஷ குடும்பம் வாக்களிப்பு-ரணிலுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு

104 Views

புதிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு  பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து ஷஷிந்திர ராஜபக்ஷவும் வாக்களித்தார். ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்போது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற நிலையிலேயே, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் பாராளுமன்றத்தில் இன்று பிரவேசித்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply