சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மாலை மீண்டும் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டாலும், இந்தியாவை தவிர எரிபொருள் ஏற்றுமதி இன்னும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதாக அமைச்சர் விஜேசேகர உறுதியளித்த போதிலும், அது வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இன்னும் மோசமாகும் என்றும் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமானங்களுக்கான எரிபொருளை பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போது 1,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.