உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்: இரு நாடுகளுக்கும் ஐநா அழைப்பு

380 Views

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பினருக்கும் ஐநாவின் மனிதநேய அலுவலர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐநா மற்றும் அதுசார்ந்த அமைப்புகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கிவருகிறது. ஆனால், சில பகுதிகளில் அவை சென்றடைவதில்,அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல்களால் சிரமங்கள் ஏற்படுகின்றன.

மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை தடுப்பதாக இரு நாடுகளும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், ஐநா இவ்வாறு தெரிவித்துள்ளது.

மக்கள் ஐரோப்பாவுக்கு தப்பிப்பது மற்றும் உயிர்காக்கும் உதவிகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும் வகையில், மனிதநேய வழித்தடங்களில் ரஷ்யா  தாக்குதல் நடத்துவதாக, ஐநாவுக்கான உக்ரைன் தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், மக்கள் பாதுகாப்பாக தப்பிப்பதை உக்ரைன் மறுப்பதாக, ஆதாரமற்ற வகையிலான இந்த குற்றச்சாட்டுகளை ஐநாவுக்கான ரஷ்ய தூதர் மறுத்துள்ளார்.

உக்ரைனின் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேய உதவிகளை மேற்கொள்வதற்காக, தனது அலுவலகம் மாஸ்கோவுக்கு குழுவை அனுப்பியுள்ளதாக, ஐநா பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களிடம் கிரிஃபித் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply