420 Views
சர்வதேச மகளீர் நாளை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மகளீர் நாள் எமக்கு கறுப்பு தினம், இராணுவத்தின் உறுதி மொழியையடுத்து ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், அடக்காதே அடக்காதே பெண்களை அடக்காதே, சிதைக்காதே சிதைக்காதே பெண்களை சிதைக்காதே போன்றவாறான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.