ரொட்டித்துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை: அமெரிக்க தூதரகம்

484 Views

10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை

10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை

உக்ரைனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித் துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படைதாக, உக்ரைனில்  உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தகவலை அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதே நேரம், அமெரிக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மோசமான போரை உக்ரைன் சந்தித்து வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக ரஷ்யவின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விட்டுக்கொடுப்பது குறித்து ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை என்றும்  தெரிவித்தார்.

மேலும் ரஷ்ய இராணுவம் தாக்குதலை நிறுத்தும்வரை அந்நாட்டுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரஷ்யாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தடை விதிக்க வேண்டும். ரஷ்ய சந்தையிலிருந்து அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் உடனடியாக வெளியேற வேண்டும். ஏனெனில், அதில் எங்களின் இரத்தக்கறை படிந்துள்ளது என்றும் ஸெலென்ஸ்கி கூறினார்.

Leave a Reply