தாக்குதல் தடுப்பு உத்திகளுக்கு டொல்பின்களை பயன்படுத்தும் ரஸ்யா

டொல்பின்களை பயன்படுத்தும் ரஸ்யா

கருங்கடல் பகுதியில் உள்ள தமது கப்பல்கள் மீது கடலுக்கடியில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு தாக்குதல் தடுப்பு முறைகள் தொடர்பில் பயிற்சி கொடுக்கப்பட்ட டொல்பின்களை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்மதி படங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் கடற்படை கல்லூரி தெரிவித்துள்ளது.

செவஸ்ரொபோல் பகுதியில் உள்ள கடற்படைத்தளத்திலேயே ரஸ்ய கடற்படையினர் இவ்வாறான டொல்பின்களை பயன்படுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகிய மாதமே இரண்டு டொல்பின்கள் பாதுகாப்பு கடமைக்காக அங்கு நகர்த்தப்பட்டுள்ளன.

கடற்படையினரின் தேவைக்காக ரஸ்யா டொல்பின்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தி வருவதுண்டு. செவஸ்ரொபோல் கடற்படைத்தளம் ஏவுகணைகளின் தூரவீச்சுக்கு அப்பால் உள்ளதால் நீருக்கு அடியிலான தாக்குதல்களே சாத்தியமானது எனவே தான் ரஸ்யா டொல்பின்களை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News