வன்முறை அதிகரிப்பு: இழப்பீடு கோரி முக நூல் நிறுவனம் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்கு

367 Views

முக நூல் நிறுவனம் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்கு


வெறுப்பு கருத்துகளை தடுக்க தவறியதாகக் கூறி 15,000 கோடி டொலர் இழப்பீடு வழங்கக் கோரி முக நூல் நிறுவனம் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

மியான்மரில் கடந்த 2017-ல் இராணுவத்தினர் நடத்திய வன்முறையால் 7.5 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டிலிருந்து தப்பி வங்கதேசம் உள்ளிட்ட இயல் நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அதற்கு முக நூலில்  பரப்பப்படும் வெறுப்பு கருத்துகளும் முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முக நூல் நிறுவனத்திடம் 15,000 கோடி டொலர் இழப்பீடு கேட்டு ரோஹிங்கியா அகதிகள் வழக்கு தொடுத்துளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எடில்சன் பிசி மற்றும் ஃபீல்ட்ஸ் பிஎல்எல்சி ஆகிய இருசட்ட நிறுவனங்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளன.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad வன்முறை அதிகரிப்பு: இழப்பீடு கோரி முக நூல் நிறுவனம் மீது ரோஹிங்கியா அகதிகள் வழக்கு

Leave a Reply