இலங்கை-அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

159 Views

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், “எரிபொருள் விலை உயர்வு, கோழித் தீவனத்தின் விலை உயர்வு காரணமாக ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோழித்தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.

65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழித் தீவன உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும்.

பண்ணையாளர்கள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்” என, அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply