வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரிக்கை

வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் பெரும்பாலான பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப் படுத்தப் பட்டுள்ளதாகவும் அதனை விடு விக்குமாறு பிரதேச செயலகத்தில் கடந்த வாரம்  நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப் புக் குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக் கப்பட்டது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு 32041.66 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதாக காணப்படுகிறது. இதில் 25242.13ஏக்கர் காணி 1970, 1986 ஆண்டு காலப்பகுதிகளில் வெளியிடப்பட்ட வர்த்த மானி அறிவித்தலின் மூலம் வனஜீவ ராசிகள் திணைக் களத்தினால் கைய கப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் பிரி வில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாகவும், 4 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவி லும் வனஜீவராசிகள் திணைக் களத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இதில் மக்களு டைய விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அடங்கு வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பகுதியின் உள்ளே 3526 காணி அனுமதிப் பத்திரங்களையும், 1002 அளிப்பு பத்திரங்களையும் வழங்கியிருப்பதாகவும் அளிப்பு பத்திரங்கள் வழங்குவதற்காக நில அளவை செய்கின்றபோது எந்த வொரு சந்தர்ப்பத்திலும் இது வன ஜீவராசிகளுக்குரிய காணி என்பதை நில அளவைத் திணைக்களம் குறிப் பிட்டிருக்கவில்லை.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப் பட்டுள்ள காணிகளில் வர்த்த மானி அறிவித்தலுக்கு முன்பதாகவே மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் 19643.59 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை எவ்வித பகுதியும் விடுவிக்கப்படவில்லை எனவும் இதனால் மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்க முடியாதுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் 11906.35 ஏக்கர் காணிகள் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதில் 3261.58 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரியும் 1001.52 ஏக்கர் நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.