அவசரகால சட்டத்தையும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கான அதிகாரத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும்

இலங்கை அரசாங்கம் காவல் துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகளவு அதிகாரங்களை வழங்கும் அவசரகால நிலையையும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான அதிகாரங்களையும் இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் மனித உரிமைகளை கௌரவம் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிகாரிகள் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கோட்டா கோ கம போன்ற பகுதிகளில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான கருத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது எனவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனடி சுயாதீன பக்கச்சார்பற்ற வெளிப்படையான பயனளிக்ககூடிய விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாக்குதலிற்கு காரணமானவர்களை அதிகாரிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலை பார்க்கும்போது அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் கோ கோத்தா கமவில் காணப்பட்ட கட்டமைப்புகளை அழித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பலவீனப்படுத்துவதற்கும் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர் போல தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்   ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தமது மனித உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளிற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான கடப்பாடும் அதிகாரிகளிற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Tamil News