வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (17) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் ஐ.நா அலுவலகத்தின் முன் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.