முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

223 Views

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம்  மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று   காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் விசாரணை நடவடிக்கை இடம்பெறுவதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் மூன்று பேர் மற்றும் அதன்  அலுவலக உத்தியோகத்தர்கள் வருகை தந்து பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசாரணை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply