202 Views
போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் இன்று பாடசாலை மாணவர்களும் சிக்கி, போதைக்கு அடிமையாகிவருவது வேதனையளிக்கின்றது. இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாகவே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் கல்விக்கப்பால், மாணவர்களின் நலன்கள், ஒழுக்கம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ சர்வதேச சாலம் முன்பள்ளி பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் (17) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.