தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை

தீருவில் திடலில் மாவீரர் நினைவேந்தல் நடத்துவதற்கு தடைகோரிய காவல்துறையினரின் மனு பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை என்று வல்வெட்டிடித்துறை நகரசபை அறிவித்திருந்தது. நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேல் முறையீட்டுக்கு அமைவாக தடைகள் தொடர்பிலான கட்டளைகள் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில், தீருவில் திடலில் நினைவேந்தனை முன்னெடுக்க நகரசபை அனுமதித்திருந்தது.

இந்நிலையில் இதனை எதிர்த்து அனுமதி வழங்கக்கூடாது என்று கட்டளை வழங்குமாறு காவல்துறையினர் பருத்தித்துறை நீதிமன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி தடைசெய்யப்பட்ட இயக்கதினை அடையாளப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதே அன்றி, இறந்தவர்களை நினைவுகூருவதை தடுக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தீருவிலில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு