மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை-பல குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்திற்கு அமைவாக கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை

குறிப்பாக தலைமன்னார்,பேசாலை,தாழ்வுபாடு மற்றும் மன்னார் நகர பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மன்னார் நகர பகுதியில் வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மழை வெள்ள நீர் வீடுகளில் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை

இதே வேளை மாவட்டத்தில் பல பாகங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ள போதும் மக்கள் இது வரை இடம் பெயரவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.