நவுருத்தீவில் கொரோனா தொற்று: சில நாட்களுக்கு மட்டுமே உணவு இருக்கிறது எனக் கூறும் அகதிகள்

379 Views

நவுருத்தீவில் கொரோனா தொற்று

நவுருத்தீவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சில நாட்களுக்கு மட்டுமே தமக்கு உணவு இருப்பதாகவும் அகதிகள் கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் 31ம் திகதி பசிபிக் தீவு நாடான நவுருத்தீவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நவுருவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தங்களிடம் உணவு இருப்பதாக அகதிகள் கூறியுள்ளனர்.

மேலும் மருந்துகள் மற்றும் உணவைப் பெறுவதற்கான போக்குவரத்து வசதி தங்களுக்கு இல்லை என்றும் தங்களிடம் பணமில்லை எனவும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil News

Leave a Reply