தலிபானிடமிருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி, சிறைவைக்கப்பட்டிருக்கும் அவலம் 

405 Views

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி: ஆப்கானிஸ்தானில் இயங்கும் தாலிபானின் தாக்குதலில் இருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரிய ஜமால் எனும் அகதி, அவுஸ்திரேலிய அரசால் காலவரையின்றி சிறைவைக்கபட்டுள்ளார். 

இந்த தடுப்பால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தின் காரணமாக நவுருத்தீவில் ஜமால் சிறைவைக்கப்பட்டிருந்த போது அவர் தீக்குளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

“இச்சம்பவத்தில் எனக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன… ஆழமான வடுக்கள். அது எனது வாழ்நாள் முழுதும் இருக்கும்,” என ஜமால் கூறியிருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு ஆட்சியில் இருந்த கெவின் ரூட் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம், படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த எவரும், அவர் அகதி என்று கண்டறியப்பட்டாலும் அவர் அவுஸ்திரேலியாவில் மீன் குடியமர்த்தப்பட மாட்டார் என அறிவித்திருந்தது.

இந்த கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கமும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால், ஜமால் போன்ற அகதி சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலிய தடுப்பில் தவிக்கும் ஏற்பட்டுள்ளது என அகதிகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் சிறைவைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய  விடுதியில், ஜமால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Tamil News

Leave a Reply