தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்

சிறந்த தீர்வொன்று கிடைக்க

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு  பல ஆலயங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் களுவாஞ்சிகுடியில்  பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில்   சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டதுடன் கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பொங்கல் பொங்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றதுடன் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதன் போது கருத்து தெரிவிக்கையில், தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்றும் தமிழர்கள் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.