பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 31 பேர் பலி

117 Views

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு

பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில், 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த   அகதிகள் படகே இவ்வாறு கவிழ்ந்து அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் 34 பேர் பயணம் செய்த நிலையில், இரண்டு பேர் மட்டுமே தற்போது உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில கால்வாயில் மூழ்கிய 31 பேரின் சடலம் மீட்கப்பட்டு, ஒருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆங்கில கால்வாயில் மூழ்கி அகதிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கவலை தெரிவித்துள்ளார். ஆங்கில கால்வாய் வழியாக அகதிகள் அதிக அளவில் வருவதை தடுக்க பிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 பிரான்சின் ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 31 பேர் பலி

Leave a Reply