ஆசியாவில் பாகுபாட்டை வளர்க்கிறதா கொரோனா சூழல்?

தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்று சூழல், ஆசியாவில் உள்ள குடியேறிகள், வெளிநாட்டினர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளவர்களை நோக்கி பாகுபாட்டை வளர்ப்பதாக International Federation of Red Cross and Red Crescent Societies அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 5 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டோர் கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மக்களை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது சீனர்கள், குடியேறிகள், வெளிநாட்டவர்களை கொரோனா பரவலுக்கு காரணமானவர்களாக அவர்கள் கைக்காட்டுகின்றனர் என்கிறது இந்த அமைப்பின் ஆய்வு.
அது மட்டுமின்றி உள்நாட்டு அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆகிய இரு புலம்பெயர் தரப்பு மக்களையும் கொரோனாவுக்கு காரணமானவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நிலை உள்ளதாக ஆய்வாளர் Vivinae Fluck தெரிவித்துள்ளார்.