சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயார்-ஜேர்மன்  துாதுவர்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயார்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயார்: கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன்  துாதுவர்  (HOLGER SEUVERT) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு  ஒன்று இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது ஜேர்மன் அரசாங்கத்தினால்  கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் விவசாயத் துறை தொடர்பான அபிவிருத்திக்கு தங்களால் முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்க உள்ளதாக  துாதுவர்  தெரிவித்தார்.

குறிப்பாக சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும்,  அதன் மூலம் பிராந்திய அபிவிருத்தி உட்பட ஏற்றுமதி வாய்ப்புகளும் ஐரோப்பிய சந்தைக்கு மேற்கொள்ள ஏதுவாக அமையும் எனத் தெரிவித்தார்.

ரம்மியமான பிரதேசமாக கிழக்கு மாகாணம் காணப்படுவதாகவும்,  முதலீட்டுக்கு ஏற்ற நிலவரம் இந்த மாகாணத்தில் காணப்படுவது முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது எனத் தெரிவித்த ஜேர்மன் துாதுவர், முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இலங்கையினுடைய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்க முடிவதோடு ஏற்றுமதி அபிவிருத்தியும் ஏற்படக்கூடிய வாய்ப்பு  என்றார்.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் சுற்றுலா மற்றும் விவசாய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதி வாய்ப்புக்களை கொண்டுள்ளதாகவும் குறித்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஜேர்மன்  தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad சுமார் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயார்-ஜேர்மன்  துாதுவர்