நெடுந்தீவு கடலில் இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விசைப்படகுடன் கைது

370 Views

நெடுந்தீவு கடலில் இராமேஸ்வரம் மீனவர்கள்

நெடுந்தீவு கடலில் இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இராமேஸ்வர மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

 இந்த நிலையில்   ஒரு விசைப்படகில் இருந்த 4 மீனவர்களையும் அவர்களது விசை படகையும், எல்லை தாண்டிய குற்றச்சாட்டில்   இலங்கை கடற்படையினர்  இன்று (29) அதிகாலை நெடுந்தீவு அருகே கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைதான மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில்  வழக்கை விசாரித்த நீதிபதி J.கஜநிதிபாலன் மீனவர்களை வரும் ஏப்ரல் மாதம் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply