ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, ஆனால் இது தற்காலிகமானதே’- நாமல் ராஜபக்ச   

324 Views

ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சி

ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சி: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச, இது இது தற்காலிகமானதே என்றும் கூறியுள்ளார்.

தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

“இரசாயன உரப் பாவனையைத் தடை செய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு. ஆனால் பொறுப்பான அதிகாரிகளினால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply