இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர்-செல்வம் எம்பி

462 Views

பிரதமருக்கான கடிதத்தில்
இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று (11.01) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள்  கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்தபோதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி  இக்கடிதம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply