மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபை தேர்தல்; பஸில் ராஜபக்‌ஷ அறிவிப்பு

மாகாண சபை தேர்தல்நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் பஸில் ராஜபக்ச நேற்று அறிவித்தார்.

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுகளின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தேர்தல் முறைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் நேற்று பாராளுமன்றில் நடைபெற்றது. இதன்போது, தெரிவுக்குழுவில் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் முதன்முறையாக பங்கேற்றிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக – எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்பாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக மாகாண சபை தேர்தல்கள் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்தில் சில சமயங்களில் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் – என்றார்.

அந்தச் சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், “அத்தகைய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல. இது தொடர்பில் நான் ஒரு தனிநபர் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றேன். கால விரயத்தைத் தடுப்பதற்காக அதையே தேவையான மாற்றங்களோடு சமர்ப்பித்து நிறைவேற்றலாம். மேலும், இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிப்பதால் முழு பாராளுமன்றின் ஆதரவோடு சட்டத்தை நிறைவேற்றலாம் – என்று கூறினார்.

சுமந்திரன் எம். பியின் கருத்தை சட்ட மா அதிபரின் பிரதிநிதி, அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மேலும், பழைய சட்டம் நடைமுறைக்கு வைந்த பின்னர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை புதிய சட்டம் மூலமாக சமர்ப்பித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா

ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்
ilakku-weekly-epaper-150-october-03-2021